புதுடெல்லி:
தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவின் டீசல் தேவை 2019-ம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்று தெரிகிறது.
டீசல் பயன்பாட்டில் உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. மெதுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக கச்சா எண்ணை விலை 2019-ல் வீழ்ச்சியடையும் என்று தெரிகிறது.
எனினும் இந்தியாவின் அதிகப்படியான டீசல் பயன்பாடு எண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கும் தேர்தலையொட்டி, டீசல் பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்கும்.
தற்போதையை டீசல் பயன்பாடு 6.9 மில்லியன் டன் அல்லது ஒரு நாளைக்கு 1.7 மில்லியன் பாரல் என்கிறது பெட்ரோலியத்துறை அமைச்சகம்.
இது குறித்து இந்தியன் ஆயில் கழக தலைவர் சஞ்சீவ் சிங் கூறும்போது, ” பல்வேறு துறைகளுக்கு டீசல் தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. நமது பொருளாதாரம் டீசல் சார்ந்து மாறிக் கொண்டிருக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்துக்கு அதிகமாகும்போது நகரமயமாக்கல் அதிகம் நிகழும். அப்போது எரிசக்தி தேவையும் அதிகரிக்கும் என்றார்.
2018-19-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே கால கட்டத்தில் கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக மட்டுமே இருந்ததாக அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.