கோல்ட் கோஸ்ட்

காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியா தனது நான்காவது பதக்கமாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

காமன்வெல்த் 2018 போட்டிகளில் ஏற்கனவே இந்தியா மூன்று பதக்கங்கள் வென்றது தெரிந்ததே.

தற்போது இந்தியா தனது நான்காம் பதக்கமான வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்கள் பளுதூக்கும் போட்டி 69 கிலோ பிரிவில் அரியானாவை சேர்ந்த தீபக் லாதர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

தற்போது 18 வயதாகும் தீபக் லாதர் கலந்துக் கொள்ளும் முதல் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றது குறிப்பிடத் தக்கது.

இவர் தனது 15 ஆம் வயதில் இருந்து பளுதூக்கும் போட்டியில் கலந்துக் கொண்டு வருகிறார்.