சென்னை: நாட்டின் தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது; பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என பிரதமர் மோடி காந்தி கிராம பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பேசினார்.
திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரதமர் மோடி, விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, காந்திகிராம பல்கலைக் கழகத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார். கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை இங்கு காணலாம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி என்பதே எங்கள் கொள்கை. காந்தியின் கொள்கையே தற்போதைய தற்சார்பு திட்டம். தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாக செயல்பட்டால் நாடும் சுயமாக செயல்படமுடியும். கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் பிரச்சனை களை ஒன்றாக எதிர்கொள்ளலாம். இன்று கிராமங்களில் இணையம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. “கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்.
காதி பொருட்கள் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. காசி தமிழ் சங்கமம் விரைவில் காசியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் கொண்டாடப்படும்.
பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் இருக்கிறது. இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின்சக்தி பயன்பாடு 24% அதிகரித்துள்ளது. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர்.
தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொன்னியின் செல்வன் நாவல் வழங்கிய முதல்வர் மற்றவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்கு காரணம்.
இவ்வாறு பேசினார்.