சமீபத்தில் சமூகவளைத்தளங்களில் ஒரு கார்ட்டூன் வலம் வருகிறது. அதில் வங்கிக்கு துப்பாக்கியுடன் கொள்ளையடிக்க வரும் திருடனுக்குப் பதிலாக வங்கியில் பணிபுரிவோரே துப்பாக்கியுடன் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிப்பதுப் போல் சித்திரம் வரையப்பட்டுள்ளது. தற்போது இந்திய வங்கிகள் வசூலிக்கு கட்டணத்தைப் பார்த்தால் அது உண்மையோ என்று தோன்றுகிறது.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை அவமதிப்பை தவிர வேறெதையும் பெரிதாகச் செய்துவிடவில்லை. இதை அவர்கள் சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய பல கட்டணங்களுக்கு (அல்லது அபராதம் அல்லது சேவை கட்டணம் என்று பல பெயர்களில் அவர்கள் அழைக்கிறார்கள்) அதாவது பண பரிவர்த்தனைகள் செய்யும் போதும் மற்ற தருணங்களிலும் வாடிக்கையாளர்களின் பணத்தை வங்கிகள் எடுத்துக் கொள்வதால் மக்களின் எண்ணற்ற விமர்சனங்களுக்கு அவர்களின் எதிர்வினை தெளிவாக அவர்களின் சஎண்ணங்களைக் காட்டியுள்ளது.

இதுவரை எந்த வங்கியிலிருந்து யாரும் மக்களின் விமர்சனத்திற்கு பதிலளிக்கவில்லை என்றாலும், இந்த அபராதங்கள், கட்டணங்கள் மற்றும் விலக்குகள் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவதற்காகத் தான். ஆனால் வாடிக்கையாளர்களின் கோபத்திற்கான காரணமே கட்டுப்பாடுகள் போதுமானதாகவும் நியாயமற்றதாகவும் உள்ளது என்பதே ஆகும். வங்கிகளைக் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொள்ளும் (சீராக்கி) நமது இந்திய ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களை வங்கிகளின் பேராசை பிடித்த வழிகளிலிருந்து பாதுகாக்க தவறிவிட்டது.

எனினும், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களாகிய நாம் பொதுவாக இரண்டு அடிப்படை விஷயங்களில் கவனம் வைக்க வேண்டும்.

1. வங்கிகள், ஏன் வேறு எந்தவொரு வணிகத்தைப் போல் அல்லாமல், ஒருதலைப்பட்சமாக நமது பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுகின்றன?
வேறு எந்த வணிகமாக இருந்தாலும் நீங்கள் எதற்காகவாது அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டுமென்றால், அப்பணத்தை உங்களிடம் கேட்டு நீங்கள் அதை ஒப்படைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு கடைக்குச் சென்று, நீங்கள் அங்கு அதிக நேரம் செலவிடுவதாகவும் அதனால் அந்த கடைக்காரருக்குக் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் அந்தக் கடைக்காரர் நினைத்தால், அவர் உங்கள் பாக்கெட்டில் கையைவிட்டு பணத்தை எடுக்க முடியாது. அது ஒரு குற்றம் ஆகும். ஆனால் வங்கிகள் அதைச் செய்ய முடியும். ஏன் இந்த நிலை? இதற்காக வங்கி சட்டதிட்டங்களில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஒரு வங்கி ஒரு சேவைக்காக நம்மிடம் வசூலிக்க வேண்டுமென்றால், அப்போதெல்லாம் அவர்கள் நமக்கு ரசீது(பில்) அனுப்பி நாம் அந்தப் பில்லிற்கு பணம் செலுத்த வேண்டும். மற்ற வணிகங்களைப் போல் வங்கிகளும் தாமாகவே நமது பணத்தை எடுக்க அனுமதிக்கப்படக் கூடாது.

2. ஏன் இந்திய ரிசர்வ் வங்கி (சீராக்கி) இந்த அபராதம் மற்றும் கட்டணங்கள் எப்படி கணக்கிடப்படுகின்றன என்ற விவரங்கள் பற்றிக் கவலைப்படவில்லை? ஒரு வங்கி, வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது ரூ .150 வசூலிக்கிறதென்றால், உண்மையில் அவ்வளவு செலவாகுமா? அந்த விலை பரிவர்த்தனை எண்ணிக்கைக்கு ஈடாக அதிகமாகுமா?

அல்லது வங்கி கணக்குள்ள கிளையைத் தவிர வேறு எந்தக் கிளையில் பரிமாற்றங்கள் செய்தாலும் அபராதமாக விதித்துள்ள அபத்தமான கட்டணத்தையும் கருதுங்கள். உண்மையில் கணினியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ள அமைப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு அல்லாத வேறு கிளையில் பணபரிவர்த்தனை செய்தால் கூடுதல் செலவாகுமா? இந்த வங்கிகள் “வங்கி கிளைகளில் மட்டும் பண பரிவர்த்தனை” நாட்களுக்கு மீண்டும் போகிறதா? ஆனால் நாம் இந்தக் கேள்விகளை வங்கிகளிடம் கேட்கக் கூடாது. அப்படியே நாம் கேட்டாலும் அவர்கள் கண்ணியமாக நமது வாயை அடைத்து விடுவார்கள் ஏனெனில் அடிப்படையில் அவர்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி தான் பதிலளிக்க வேண்டும். இந்த வங்கிகள் தனித்தனியாகவும் ஒட்டுமொத்தமாகவும் எவ்வளவு வசூலிக்கின்றன என்று கண்காணிக்க வேண்டும். அது தரவுகளைச் சேகரிக்கிறதா? அத்தகைய அபராதம் மற்றும் கட்டணங்களிலிருந்து ஒவ்வொரு வங்கியின் வருமானம் என்ன என்று நமக்கு ஒரு பட்டியல் தர முடியுமா? உண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியால் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான பதில்களை கொடுக்க முடியாது.

இம்மாதிரியான நிலைமைக்காகத் தான் தகவல் அறியும் சட்டம் உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் முன் வந்து, கேள்விகள் கேட்டுப் பதில்களை ஆராய்ந்து மாற்றங்களைக் கட்டாயப்படுத்தி தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது.