எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி. பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 17 இந்திய வங்கிகளில் மொத்தம் ரூ. 34615 கோடி மோசடி செய்ததாக தீவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (டி.ஹெச்.எஃப்.எல்.) நிறுவனத்தின் கபில் வாத்வான் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

தீரஜ் வாத்வான்

யெஸ் பேங்க் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே 2020 ம் ஆண்டு கைது தீரஜ் வாத்வான் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்றிருக்கும் மோசடி நாட்டிலேயே மிகப்பெரிய பணமோசடி என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மும்பையில் தீரஜ் வாத்வான் மற்றும் கபில் வாத்வான் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. தற்போது சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணமோசடி தொடர்பாக டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனம் மீது 2022 பிப்ரவரி மாதம் வங்கிகள் அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.