புதுடெல்லி: 
ர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதியானது. மேலும், டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 17 பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், மகாராஷ்டிரா, குஜராத்தில்  ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.
தற்போது டெல்லியிலும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.