ஸ்ரீஹரிகோட்டா

நாளை இந்தியாவின் 100 ஆவது செயற்கைக்கோள் கார்டோசாட் 2 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்படுகிறது.

இந்தியாவின் 100 ஆவது செயற்கைக் கோள் கார்டோசாட் 2 என பெயரிடப்பட்டுள்ளது.

நாளை காலை 9.29 மணிக்குஏவப்பட உள்ள கார்டோசாட் 2 வுக்கான கவுண்ட் டவுன் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கி உள்ளது.

இந்த கார்டோசாட் 2 உடன் 3 சிறிய வகை செயற்கைக்கோள்களும், மற்றும் 25 நானோ செயற்கைக்கோள்களும் ஏவப்பட் உள்ளன.

இந்த செயற்கைக் கோள்கள் பி எஸ் எல் வி சி 40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட உள்ளது.

இந்த பி எஸ் எல் வி சி40 ராக்கெட்டின் எடை சுமார் 320 டன் ஆகும்.

பூமியில் இருந்து புறப்பட்ட பின் 2 மணி,  22 நொடிகளுக்குப் பின் இந்த ராக்கெட் அனைத்து செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலை நிறுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.