இந்திய இளைஞர்களுக்கு வேலை இன்மை பெரிய சவாலாக உள்ளது : ஆய்வு அறிக்கை

Must read

டில்லி

ந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் இந்திய இளைஞர்களுக்கு வேலை இன்மை ஒரு சவாலாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியப்  பொருளாதார கண்காணிப்பு மையம் சமீபத்தில் இந்திய இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவர்களுடைய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆய்வு ஒன்றை நடத்தியது.  இந்த ஆய்வு சுமார் 174,405 இல்லங்களில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள இல்லங்களிலும் நடத்தப்பட்டது.   அதில் 12 வகையான கேள்விகள் கேட்கப்பட்டன.   இந்த ஆய்வு கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாதங்கள் நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுற்ற இந்த ஆய்வின் முடிவில் வேலை இன்மை 7.5% அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   ஏற்கனவே இது போல் ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தொடர்ந்து ஏழாம் முறையாக  வேலை இன்மை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.    இந்த ஆய்வறிக்கை முடிவில் தற்போது இந்திய இளைஞர்களுக்கு வேலை இன்மை பெரிய சவாலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article