மக்ரான் கடற்பரப்பில் படைகளை குவிக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இந்திய கப்பற்படை

புதுடெல்லி:

பாகிஸ்தானின் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில், வடக்கு அரேபிய கடற்பரப்பில் போர்க் கப்பல்கள்,நீர்முழ்கிக் கப்பல்கள், போர் விமானங்களை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது.


புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் சென்று பால்கோட்டில் தீவிரவாதிகள் முகாமை அழித்தது.

இதனையடுத்து, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படையினர் விரட்டியடித்தனர்.

இதனையடுத்து, எந்நேரமும் பாகிஸ்தான் திருப்பித் தாக்குதல் நடத்தும் என்பதால், வடக்கு அரேபியக் கடற்பரப்பில் இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய கப்பற்படையின் செய்தி தொடர்பாளர் டிகே.சர்மா கூறும்போது, “போர் கப்பல்கள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மக்ரான் கடற்பரப்பில் பாகிஸ்தான் தொடர்ந்து படைகளை குவித்து வருவதால் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்திய கப்பற்படை மேற்கொண்டுள்ளது” என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: navy, இந்திய கப்பற்படை, பாகிஸ்தான்
-=-