திருச்சி:

ந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் உடல்நலமின்றி காலமானார். அவருக்கு வயது 72. வயது முதிர்வு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72) இன்று (30-10-2019) புதன்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சியில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் திருச்சி காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் நல்லடக்கம் நாளை (31-10-2019) வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சி காஜாமலை மஸ்ஜிதே ஹுசைனி ஜூம்மா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.