ஜாகெரப்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஃபைனல்ஸ் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் லியாண்டர் பயஸ் ஜோடி வென்றாலும், ஒட்டுமொத்த அளவில் இந்திய அணி பின்தங்கியுள்ளது.
குரேஷியா அணியை எதிர்த்து விளையாடுகிறது இந்திய அணி. ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு என்று போட்டிகள் நடக்கின்றன.
இதில், ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் குன்னேஸ்வரன், குரேஷியாவின் போர்னா ஜோகோவிடமும், மற்றொரு ஒற்றையர் போட்டியில், இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், குரேஷியாவின் மரின் சிலிச்சிடமும் தோற்றுப் போயினர்.
ஆனால், இரட்டையர் பிரிவில், லியாண்டர் பயஸ் – போபண்ணா இணை, குரேஷியாவின் மடே பாவிச் – ஃபிரான்கோ இணையை எதிர்கொண்டு வெற்றிபெற்றது.
இரட்டையர் பிரிவில் மட்டுமே வென்றதால், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.