மும்பை

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மும்பையில் வரும் 29 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் த்ள்ளி வைக்கப்படலாம் என .

வருடம் தோறும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் 29 ஆம் தெதி தொடங்க உள்ளது.  கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டிகள் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மே மாதம் 24 வரை நடைபெற உள்ளது.  இந்த போட்டியின் முதல் ஆட்டம் மும்பை நகரில் நடைபெறுகிறது.

தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.   இதுவரை இந்தியாவில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதையொட்டி மத்திய மாநில அரசுகள்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளையும் கேட்டுக்  கொண்டுள்ளது.

தொடக்க நாளன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.   இந்த போட்டிகளின் போது கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கொரோனா வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.   மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த போட்டிகளைத் தள்ளி வைக்குமாறு பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, “ஐபிஎல் போட்டிகள் ஏற்கனவே அறிவித்தபடி மாற்றமின்றி நடைபெறும்.  இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த போட்டிகளை ஏன் தள்ளி வைக்க வேண்டும் என எனக்குத் தெரியவில்லை.  இது குறித்து எங்கள் மருத்துவக் குழு தான் கூற வேண்டும்.   அவர்கள் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.” எனக் கூறி உள்ளார்.