சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) புள்ளிகள் பட்டியலில் இந்தியா 54.16 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டி யலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை யும் பறிகொடுத்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் மார்க்ரம் மட்டும் சதமடிக்க தென்னாபிரிக்கா 176 ரன்களுக்கு பும்ராவின் அசத்தலான பந்து வீச்சில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, 79 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.6 ஓவரில் 80/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 28 ரன்களும், ஷுபம்ன் கில் 10 ரன்கள், விராட் கோலி 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருந்தாலும், ரோஹித் சர்மா 17 ரன்களுடனும் ஸ்ரேயாஷ் ஐயர் 4 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு உதவினார்கள். தன் காரணமாக இந்தியஅணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதன்காரணமாக, கேப்டவுன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய நாடாக இந்திய அணி திகழ்கிறது. இதுமட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் சமன் மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை பெற்று 54.16 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா (50%), மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து (50%), நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் தலா 50 புள்ளிகளுடன் உள்ளன. பாகிஸ்தான் அணி 45.83% ஆறாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 16.67 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், 15 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 8வது இடத்திலும், அதைத்தொடர்ந்து இலங்கை என அடுத்தடுத்த இடங்களில் தொடர்கன்றன.