மும்பை

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அரை இறுதியில் நியுஜிலாந்துடன் இந்தியா தோல்வி அடைந்ததால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இயலவில்லை. அப்போதிலிருந்தே பலரும் தோனிக்கு வயதாகி விட்டதால் அவரால் வேகமாக ஓட இயலவில்லை என குறை கூறி வந்தனர்.

உலகக் கோப்பைக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் பந்தயம், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று இதற்கான வீரர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தோனி இடம் பெறவில்லை.

அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி தலைமையில் அணி விளையாட உள்ளது.

இதில் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி (தலைவர்), ரெகானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில், விராட் கோலி (தலைவர்), ரோஹித் சர்மா (துணைத் தலைவர்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர்.

இதைத் தவிர மூன்று டி 20 போட்டிகள் அணியில் விராட் கோலி (தலைவர்), ரோஹித் சர்மா (துணைத் தலைவர்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், கர்ணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் பெயர் உள்ளது.