இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக டி ராஜா தேர்வு

Must read

டில்லி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக டி ராஜா தேர்வு செய்யப்பட்டுளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலராக சுதாகர் ரெட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். தற்போது அவர் உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளது.  அதனால் அவர் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த பொதுச் செயலராக டி ராஜாவின் பெயரை அவர் கம்யுனிஸ்ட் கட்சியின் செயற் குழுவுக்கு முன் மொழிந்தார். டி ராஜா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது, அதில் சுதாகர் ரெட்டியின் சிபாரிசை ஏற்ற செயற் குழு டி ராஜாவை பொதுச் செயலராக ஒரு மனதாக தேர்வு செய்துள்ளது.

More articles

Latest article