அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறவுள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உமேஷ் யாதவ் உடல் தகுதி பெற்றால், அவர் அணியில் சேர்க்கப்பட்டு, விஜய் ஹசாரே கோப்பைக்காக ஷர்துல் தாக்கூர் விடுவிக்கப்படுவார்.

மாற்று வீரர்களாக ஷான்பாஸ் நீதமுக்கு பதிலாக, லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கோனா ஸ்ரீகர் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜய் ஹசாரே கோப்பைக்காக பிரயங்க் பஞ்சல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களான அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கவுதம், சவுரவ் குமார் ஆகியோர் தொடர்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விபரம்:

விராத் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், ஷப்மன் கில், சத்தீஷ்வர் புஜாரா, ரஹானே, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பன்ட், விருதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸார் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்.