சென்னை:

மிழக அரசு அறிவித்த அப்துல்கலாம் விருதை இஸ்ரோ சிவன் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு  அப்துல் கலாம் விருது  வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான அப்துல்கலாம்  விருது தமிழகத்தைச் சேர்ந்த  இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  அதன்படி கடந்த ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரதினத்தன்று விருது வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினம் அலுவல் பணி காரணமாக சிவன் கலந்துகொள்ள முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த இஸ்ரோ சிவனுக்கு தமிழக அரசின் அப்துல்கலாம் விருதை முதல்வர் நேரில் வழங்கி கவுரவித்தார்.

இஸ்ரோ சிவன் ஏற்னவே கடந்த 1999 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2007 ஆம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆண் பெண் வேறுபாடின்றி இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு  முன்னுரிமைஅளிக்கப்படும் என்று தெரிவித்தார்.