லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில்  சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துஏற்பட்டதால், அந்த பாதையில் செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

உ.பி. மாநிலத்தில், இன்று அதிகாலை 4 மணியளவில் பிரயாக்ராஜ் மண்டலம் துண்ட்லா – கான்பூர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று அம்பியாபூர் மற்றும் ரூஷா ரயில் நிலையத்திற்கு இடையே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தில் 24 பெட்டிகள் ரயில் தண்டவாளத்தை விலகியுள்ளன.

இதனால், துண்ட்லா – கான்பூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக வடமத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சில ரயில்கள் கான்பூரிலிருந்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன. இன்று நள்ளிரவுக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படு வதாக  வடமத்திய ரயில்வே மூத்த அதிகாரி மோஹித் சந்திரா தெரிவித்து உள்ளார்.