15 ரூபாய்க்கு சாப்பாடு.. உதவ முன்வரும் ரயில்வே..
கொரோனா வைரஸால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, முழு வீச்சில் இயங்கமுடியாமல் தத்தளிக்கிறது. பயணிகள் ரயில் ஓடாமல் வாரக்கணக்கில் ஓய்வெடுத்து வரும் நிலையில், குறிப்பிட்ட வழித்தடங்களில், சரக்கு ரயில் போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது.
இன்னொருபக்கம் தினமும் லட்சக்கணக்கான பேருக்கு உணவு படைக்கும் ரயில்வேயின் சமையல் கூடங்கள் வேலை இல்லாததால், அவற்றின் அடுப்புகளில் பூனை தூங்கும் அளவுக்குக் குளிர்ந்து போயுள்ளன.
இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ரயில்வே நிர்வாகம் புதிதாக அதிரடி நடவடிக்கை ஒன்று இறங்கியுள்ளது.. அதாவது மலிவு விலையில் விதவிதமான சாதங்களைத் தயாரித்து வழங்கத் தயார் என்று தற்போது ரயில்வே அறிவித்துள்ளது.
கிச்சடி, வெஜிடபிள் பிரியாணி தக்காளி சாதம் பிரியாணி எனப் பல வெரைட்டிகளில், அதுவும் வெறும் 15 ரூபாய்க்குத் தருவதற்கு ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது இதுபற்றி அந்தந்த ரயில்வே மண்டலங்களுங்களுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
மிகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு தரமான உணவுகளைத் தயாரிக்கும் தங்களின் பண்டங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் பசியால் வாடுபவர்களின் துயர் கிடைக்க வழி பிறக்கும் என்றும் ரயில்வே துறை நம்புகிறது.
எல்லா ஆரம்பக் கட்ட முயற்சிக்கும் யாராவது ஒருவர் முன்வந்து கைகொடுத்து நம்பிக்கை தருவார் என்பதுபோல, ஜார்கண்ட் மாநில அரசு, தினமும் 2,000 உணவுப் பொட்டலங்களை வழங்க ரயில்வே துறைக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
– வி.பி லதா