அமிர்தசர்:
இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை வழங்கி பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
பாகிஸ்தான் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. எல்லைப் பாதுகாப்புப் பணியில் இரு நாட்டு வீரர்களும் சுதந்திரத் தினத்தன்று இருதரப்புக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைக் கூறுவதை வழக்கம்.

அந்த வகையில் அடாரி,வாஹாவில் உள்ள எல்லையில் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு இனிப்புகளை வழங்கினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்புப் படையினரும் வாழ்தத்துக்களைத் தெரிவித்தனர்.