ஹூஸ்டன்
அமெரிக்க தகவல் ஆணையத்தில் முதல் பெண் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இந்திய வம்சாவளியினரான மோனிஷா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டு அரசின் வானொலி, தொலைக்காட்சி, செயற்கைக்கோள், கேபிள் போன்ற அனைத்து வெளிநாடு மற்றும் தகவல் தொடர்புகளை அமெரிக்கத் தகவல் தொடர்பு ஆணையம் நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக அஜித் பை பதவி வகித்து வருகிறார். இவருக்கு இந்த அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆலோசனைகள் வழங்குவார்.
இந்த அமைப்பின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இதுவரை ஆண்கள் மட்டுமே பணி புரிந்து வந்தனர். தற்போது முதன் முறையாக இந்த பதவிக்கு ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய வம்சாவளியினரான டாக்டர் மோனிஷா கோஷ் ஆவார். இவர் அடுத்த மாதம் 13 ஆம் தேடி பதவி ஏற்கிறார்.
மோனிஷா கோஷ் கடந்த 1986 ஆம் ஆண்டு காரக்பூர் ஐஐடியில் பிடெக் பட்டம் பெற்றார் கடந்த 1991ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியா பலகலைக்கழகத்தில் பி எச் டி முடித்தார். இவர் ஒயர்லெஸ் தொழில் நுட்பம் குறித்துப் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இவருக்கு இந்த அமைப்பின் தலைவர் அஜித் பை வரவேற்று தெரிவித்துள்ளார்.