ஒடிஷா: வங்கக் கடலில் அம்பான் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 650 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து 24 மணி நேரத்தில் புயலாக மாறி அதிதீவிர புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை வரை வடமேற்கு திசையில் நகரும். பின்னர் திசையில் மாற்றம் பெற்று வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கமானது வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் இருக்கும் என்றும் கூறி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் கொடி எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.
அம்பான் புயல் காரணமாக கடுமையான சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச்  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.