இந்தியப் படைகளால் வலது கண் பாதிக்கப்பட்ட 6 வயது காஷ்மீர் சிறுமி முனீஃபா நஸீர்

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பான சிறந்த புகைப்படங்களுக்காக, இந்தியாவின் 3 மீடியா புகைப்படக் கலைஞர்களுக்கு, 2020ம் ஆண்டிற்கான கெளரவம் வாய்ந்த புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் குடும்பத்துடன் சன்னி ஆனந்த்

சன்னி ஆனந்த், தார் யாஸின் மற்றும் முக்தர் கான் ஆகிய மூவருக்கும் அம்சங்கள் சார்ந்த புகைப்படப் பிரிவில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அசோசியேட்டட் பிரஸ் நியூஸ் ஏஜென்சியில் பணியாற்றுபவர்கள்.
தன் குடும்பத்துடன் தார் யாஸின்

இந்த விருது, சர்வதேச பத்திரிகை உலகில் உயர்ந்த விருதாக மதிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு மோடி அரசால், 370வது சிறப்பு பிரிவு விலக்கிக் கொள்ளப்பட்டது மற்றும் அந்த மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையொட்டி, அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழல்களை இந்த மூவரும் படம் பிடித்தனர்.
காஷ்மீரில் என்னதான் நடக்கிறது என்ற உண்மைகள், மோடி அரசின் இரும்புத்திரை நடவடிக்கைகளால் இன்றுவரை தெரியாத சூழலில், இவர்களின் புகைப்படங்கள் ஓரளவிற்கு சூழலை உணர்த்துவதாக உள்ளன.
குடும்பத்துடன் முக்தர் கான்

அவர்கள், தங்கள் புகைப்படங்கள் அடங்கிய மெமரி கார்டுகள் மற்றும் பென்டிரைவ்களுடன் ஸ்ரீநகர் விமான நிலையம் சென்று, டெல்லி செல்லும் பயணிகளிடம் அவற்றைக் கொடுத்து, அதை எப்படியாவது அசோசியேட்டட் பிரஸ் அலுவலகத்தில் சேர்த்துவிடுமாறு அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் எடுத்த காஷ்மீர் தொடர்பான மேலும் சில புகைப்படங்கள்: