டில்லி
இந்திய நாட்டின் சட்ட அமைப்பு நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளதாக ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா பணி ஓய்வு பெற்றுள்ளார். அவர் தனது பிரியாவிடை உரையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நிகழ்த்தி உள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் விடைபெற்ற முதல் நீதிபதி தீபக் குப்தா ஆவார். தீபக் குப்தா மைனர் பெண்ணுடன் அனுமதியுடன் உறவு கொ0ள்வதும் வன்புணர்வு குற்றம் என்னும் தீர்ப்பை அளித்துள்ளார். இதற்கு முன்பு திரிபுரா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பில் இருந்துள்ளார்.
நேற்று நடந்த தீபக் குப்தாவின் பிரிவபசார கூட்டத்தில் பல உச்சநீதிமன்ற நீதிபதிகள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால், சொலிசிட்டர் ஜெனர்ல துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் துஷ்யந்த் தேவ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தீபக் குப்தா தனது பிரியாவிடை உரையை ஆற்றினார்.
அவர் தனது உரையில், “நமது சட்டங்களும் சட்ட அமைப்புக்களும் பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் மட்டுமே ஆதரவாக அமைந்துள்ளது. ஒரு பணக்காரரோ அல்லது அதிகார வர்க்கத்தினரோ சிறையில் இருந்தால் அவர் மீண்டும் மீண்டும் உயர்நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்வார். அதே வேளையில் ஒரு ஏழை அவ்வாறு முயற்சி செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகும்.
பிணையில் இருக்கும் பணக்காரர் தனது வழக்கை தாமதப்படுத்த விரும்பினால் அவர் உயர்நீத்மன்றங்களை அணுகுவதோ அல்லது விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தி அதன் மூலம் விரக்தி மனப்பான்மையை உண்டாக்க முயல்வார். நமது நாடு நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ள நாடாகும்.
எனவே நாம் நீதித்துறையில் எதுவும் நடக்கவில்லை என நெருப்புக் கோழி போலத் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ள முடியாது. நான் நீதித்துறையின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதைச் சரி செய்ய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் நீதித்துறையின் ஒருமைபாட்டை ஆபத்தில் கொண்டு செல்லக் கூடாது.
அரசியலமைப்பு உரிமைகள் நெருக்கடி காலக்கட்டஙக்ளில் மீறும் போது வழக்கம் போல் சாமானிய மக்கள் குரலின்றி போகின்றனர். எவராவது சாமானிய மக்களுக்காகக் குரல் எழுப்பும் போது அதை நீதிமன்றம் கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன். சாமானிய மக்களுக்கு ஏதும் செய்ய முடியும் என்றால் அவர்களுக்கான வாய்ப்பை அளியுங்கள்” எனக் கூறினார்.
இந்த கூட்டத்தில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் “தங்கள் மாற்றுக் கருத்து மற்றும் எதிர்ப்பினை அமைதியான முறையில் குடிமக்கள் வெளிப்படுத்த அனுமதி உண்டு என்னும் உங்கள் கருத்துக்களை எப்போதும் மறக்க முடியாது. நீங்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது தெரிவித்த இந்த தைரியமான கருத்தை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்” எனக் கூறி உள்ளார்.