இந்திய பயனர்களுக்கும் ஐரோப்பிய பயனர்களுக்கும் இடையே வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுவதால், மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

வாட்ஸ்அப்பின் புதிய தரவு கொள்கை தனி மனித பாதுகாப்பு கொள்கைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல் இந்திய மக்களின் உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் அன்றாட தகவல் தொடர்புக்காக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், பொறுப்பற்ற முறையில் செயல்படவேண்டாம் என வாட்ஸ்அப் நிறுவனத்தை எச்சரித்திருக்கிறது.

இன்னும் ஏழு நாட்களுக்குள் நல்ல முடிவு எடுக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.