கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் 77கி எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு தங்கம் வென்று சாதனை படைத்த,  தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், தற்போதும்  தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவரது வெற்றிக்கு  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சதீஷ்குமார் வெற்றி பெற்றதற்கு அவரது பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தீஷ்குமார் தங்கம் வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம், எனது மகனால் காமன்வெல்த் அரங்கில் இந்திய கொடி பறப்பது பெருமையாக இருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

சதீஷ்குமாரின் தாயார் தெய்வானை கூறும்போது,  கால் வலியுடன் விளையாடிய தனது மகன் சதீஷ் தங்கம் வன்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆனந்த கண்ணீர் வழிய தெரிவித்தார்.

சதீஷ்குமார் தங்கம் வென்றதற்கு சமூக வலைதளங்களிலும்  வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.