டில்லி,
ளவு பார்த்ததாக இந்தியாவிலிருந்து  பாகிஸ்தான்  தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகள் மீது  அபாண்டமாக குற்றம் சாட்டியது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த 8 இந்திய தூதரக அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் இருந்து நாடு திரும்பினர்.
2 வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக 3 பேரை பிடித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது, பிடிபட்டவர்களில் ஒருவரான மெமூத் அக்தர் என்பவர், தான் டெல்லியில் உள்ள  பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றியதும், அவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டது.
embasy
தனது தூதரக அதிகாரியால் சர்வதேச அளவில் தலைகுனிவை சந்தித்த பாகிஸ்தான் மறுநாளே இஸ்லாமா பாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி சுர்ஜித் சிங், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக அபாண்டமாக குற்றம் சுமத்தி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரத்தில் டெல்லியில் மேலும் 5 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. அவர்களும் பாகிஸ்தான் திரும்பினர்.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 8 அதிகாரி களும், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதனால் அவர்கள் 8 பேரையும்  இந்தியா திரும்ப பெறுவதாக அறிவித்தது.  இந்த நிலையில் 8 இந்திய தூதரக அதிகாரிகளும் நேற்று நாடு திரும்பினர்.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் கடந்த ஒரு மாதமாக அத்துமீறி 100 முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ள பாகிஸ்தான் ராணுவம், அதற்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.