மும்பை:

ந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று வெளியாக செய்திகளில் முதலில் ரவிசாஸ்திரி அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் அறிவிக்கப்படவில்லை என்றும் பிசிசிஐ மறுப்பு தெரிவித்தது.

ஏற்கனவே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அணில்குப்ளே தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து,  இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர், இது தவறான செய்தி என்று பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிசிசிஐ-ன் தற்காலிக தலைவர் சி.கே.கன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கிரிக்கெட் ஆலோசனைக் குழு பரிந்துரையின்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானையும் நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்று நிலவி வந்த குழப்பம் நீக்கப்பட்டது.