ண்டன்

ற்போது விளையாடி வரும் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6000 ரன்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (வயது 34).  தற்போது இவர் லண்டனில் உலகப் பெண்கள் சாம்பியன் கப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் தற்போதைய நிலவரப்படி 45 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் 6000 ரன்களுக்கு மேல் எடுத்து முதலிடத்தை பிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

1999 ஆம் வருடம் தனது 16 வயதில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து விளயாட ஆரம்பித்த இவர் தனது 19ஆம் வயதில் டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது