ஸ்லாமாபாத்

இந்திய வீரர்கள் நாட்டுக்காக இல்லாமல் தங்களின் சொந்த சாதனைகளுக்காகவே விளையாடினார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் கூறியுள்ளார்.

உலகின் பல நாடுகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் சமூக வலைதளங்களில் தங்களின் எண்ணங்களை பதிவிட்டு வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் ஆட்ட அனுபவங்களை ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தனது கிரிக்கெட் நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

1992 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த இன்ஸமாம், “அந்த உலகக் கோப்பையில் இந்திய வீரர்களிடம் பெரிய சாதனை ஷீட் இருந்தது. நாங்கள் 30, 40 ரன்கள் அடித்தாலும் நாட்டுக்காக ஆடினோம்.

இந்திய வீரர்கள் 100 ரன்கள் எடுத்தாலும் அது அணிக்காக இல்லாமல் சொந்த சாதனைக்காகவே இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றி கூறுகையில், 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இது தொடர்பாக பல முறை இது குறித்து பேசியும் இந்திய தரப்பில் எந்த பதிலும் இல்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு நாடுகளிடையே நல்லுறவு இல்லாதது வருத்தமளிக்கிறது” எனவும் கூறினார்.

இன்ஸமாமின் இப்பேச்சு இந்திய ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

1992 ஆம் பாகிஸ்தான் இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.