லகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான்  உலககோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் ஜாஸ் டிவி நிறுவனம், இந்திய கிரிக்கெட் அணியை சிறுமைப்படுத்தும் விதமாக, ஐஏஎப் வீரர் அபிந்தன் வேடத்தை சித்தரித்து விளம்பரம் வெளியிட்டது. இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்திய ரசிகர்கள் புதிய வீடியோவை வெளியிட்டு பாகிஸ்தானுக்கு மரண மாஸை காண்பித்துள்ளனர்.

அந்த வீடியோவில் பாக் அணி ஜெர்ஸி அணிந்த ஒருவர் இந்திய அணி ஜெர்ஸி அனிந்திருக்கும் ஒருவருக்கு ஒரு கிப்ட் பார்சல் கொடுக்கிறார். அவர் எதற்கு என கேள்வி எழுப்ப ஹேப்பி பாதர்ஸ்டே என்று அந்த நபர் கூறுகிறார். அதில் என்ன உள்ளது என்றதற்க கர்ச்சிப் என்று சொல்ல,  எனக்கு ஏன் கர்ச்சிப் கொடுக்கிறீர்கள் என கேட்டதற்கு போட்டியில் தோற்றதும் முகத்தில் மூடி கொள்ளுங்கள் என சொல்கிறார். மேலும் கிண்டல் செய்யும் விதமாக உரையாடல் தொடர்கிறது.

இந்த உரையாடல் அனைத்தும் ஒரு சலூன் கடையில் நடக்கிறது. இதை கவனித்த சலூன் கடைக்காரர் பாக் . ஜெர்ஸி அனிந்தவருக்கு அபிநந்தனை போல் மீசை வைத்து விடுகிறார்.

அதை பார்த்து அதிச்ச்சியடைந்த அவரிடம் இந்திய ஜெர்ஸி அணிந்த வீரர் இந்த கர்ச்சிப் வைத்து நீங்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என கூறுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகிறது.