தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்? சட்ட ஆணையம் பரிந்துரை

Must read

டில்லி:

கவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், இந்திய கிரிக்கெட் வாரியத்தை இணைக்க வேண்டும் என  சட்ட ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

கிரிக்கெட் வாரியங்கள் பல்வேறு வரிச்சலுகைகளை பெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், மாநில கிரிக்கெட் சங்கங்களையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று சட்ட ஆணையம் தெரிவித்து உள்ளது.

மற்ற தேசிய விளையாட்டு அமைப்புகள் அனைத்தும் தகவல் பெறும்  சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் கிரிக்கெட் வாரியத்தை மட்டும் ஏன் இணைக்கவில்லை என்றும் கேள்வி விடுத்துள்ளது.

மேலும், 1997-ம் ஆண்டில் இருந்து 2007-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் இருந்து ரூ.2,168 கோடிக்கு வரிச்சலுகை பெற்றிருப்பதையும் குறிப்பிட்டு,  இந்திய கிரிக்கெட் வாரியம் அரசு சாரா அமைப்பு என்று சொல்லப்பட்டாலும், இந்திய வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய சீருடையை அணிவதையும், ஹெல்மெட்டில் அசோகா சக்கரம் பொறிக் கப்பட்டு இருப்பதையும் சட்ட ஆணை யம் சுட்டிகாட்டியுள்ளது.

எனவே கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப் படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும்,  அதை தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டியது அவசியம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால்,  இந்திய அணியின் வீரர்கள் ஏலம் மற்றும் போட்டிகள் வாயிலாக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article