வாஷிங்டன்: காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்க வேண்டுமெனவும், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதை தொடர வேண்டுமெனவும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் சமூகம், அமெரிக்க அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

“காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசு தனது இறையான்மையின்படி எடுத்த முடிவை அமெரிக்க முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். அதோடு, எல்லைத்தாண்டி பயங்கரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதையும் நிறுத்தும்படியும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதை தொடர வேண்டும்.

இதன்மூலம், நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும்” என்று இந்து – அமெரிக்கன் ஃபவுண்டேஷன் அமைப்பின் மேலாண் இயக்குநர் சமீர் கல்ரா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 3 பிராந்தியங்களிலும் வாழும் மக்களை, இந்தியாவின் இதரப் பகுதிகளுடன் ஒருங்கிணைக்க முடியுமெனவும், நாட்டின் சட்டங்களை எல்லா இடங்களிலும் ஒரேமாதிரி அமல்செய்ய முடியுமெனவும் கூறியுள்ளார் சமீர் கல்ரா.