லடாக் எல்லையில் இந்திய -சீன வீரர்கள் இடையே மோதல்! ராணுவ கர்னல் உள்பட 3 இந்தியவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீன ராணுவத்தினர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலின்போது, இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன துருப்புக்கள் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதில், ஒரு கர்னல் தர அதிகாரி மற்றும் இந்திய ராணுவத்தின் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் தோட்டாக்கள் எதுவும் சுடப்படவில்லை என்றும், கற்களைக்கொண்டே தாக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.