டில்லி
லடாக் பகுதியில் நடந்த மோதலை அடுத்து இந்திய ராணுவத்தினர் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கி விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

கிழக்கு லடாக் பகுதியில் சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 76 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது கடந்த 1975 ஆம் ஆண்டு அருணசலப்பிரதேசத்தில் 4 அசாம் ரைஃபிள் பிரிவு வீரர்க்ள் தாக்கிக் கொல்லப்பட்ட பிறகு 45 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தியா மற்றும் சீன எல்லைப்பகுதியில் 1996 மற்றும் 2005 ஆம் வ்ருட்ம கையெழுத்தான ஒப்பந்தங்களின் படி இரு தரப்பினரும் எல்லைக்கோட்டுக்கு இரு கிலோமீட்டருக்குள் குண்டுகள் மற்றும் துப்பாக்கியை பயன்படுத்தக்கூடாது என்பது விதியாகும். ஆனால் தற்போது சீனப்படையினர் இந்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
எனவே இந்தியா இந்த விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின்படி அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் துப்பாக்கிகளை பயன்படுத்தப் படை தளபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி நிலைமையைச் சமாளிக்க ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து இந்த விதிமாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]