நியூயார்க்:

புற்றுநோய்க்கான சிகிச்சையை மேம்படுத்தியதற்காக அமெரிக்க வாழ் இந்தியா வம்சாவளி பெண்ணான காவியா கோப்பரப்புவிற்கு தேசிய ஸ்டெம் கல்வி விருது வழங்கப்பட்டுள்ளது.


19 வயதான அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி பெண்ணான கவிதா, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள தேசிய ஸ்டெம் (சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் மேத்ஸ்) கல்வி விருது, புதிய கண்டுபிடிப்புகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மூளை புற்றுநோய்க்கான சிகிச்சையை உலக அளவில் மேம்படுத்தியதற்காக கவிதா கோப்பரப்புக்கு ஸ்டெம் கல்வி விருது வழங்கப்பட்டது.

ஸ்டெம் கல்வியை அர்த்தமுள்ளதாக மேம்படுத்தியதற்காகவும், அதி புத்திசாலித்தனத்துடன் தன் கண்டுபிடிப்பை செய்ததற்காகவும் அவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பண முடிப்பும் வழங்கப்பட்டது.

டிஎன்ஏ பரிசோதனையை விட புற்றுநோய் கட்டியின் ஸ்கேன் படத்தை வைத்து பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் விரைந்து மூளைப் புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறையை கவிதா கண்டுபிடித்துள்ளார்.

ஸ்டெம் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, மற்றவர்களையும் ஸடெம் கல்வியில் சிறந்து விளங்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கம்ப்யூட்டர் அறிவியல் திட்டம் தொடர்பான ஆதாயமில்லா நிறுவனம் ஒன்றையும் காவிய நடத்தி வருகிறார். இதில் 3,800 அமெரிக்க மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இளம் பெண்களை அதிகாரமிக்க பெண்களாக உருவாக்குவதே தனது லட்சியம் என்கிறார் கவிதா.