இந்தியா – இங்கிலாந்து இடையே ஹைதராபாத்தில் நடைபெற்ற 2வது டெஸ்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 143 ரன்கள் அதிகம்பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்கள் எடுத்தது.
399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 292 ரன்களுக்கு ஆலவுட் ஆனது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் எடுத்த ஜஸ்பிரித் பூம்ரா இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் விக்கெட் எதுவும் எடுக்காத அஸ்வின் ரவிச்சந்திரன் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் எடுத்தார்.
அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டை எட்ட இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படும் நிலையில் அவர் இந்த சாதனையை எட்டமுடியாமல் போனது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.