வெல்லிங்டன்

இன்று நடந்த நியூஜிலாந்து – இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா – நியுஜிலாந்துக்கு இடையிலான ஒரு நள் கிரிக்கெட் போட்டியிம் ஐந்தாம் மற்றும் இறுதிப்போடி இன்று நடந்தது. இந்திய அணி டாஸ் வென்றதை ஒட்டி அணித் தலைவர் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ஆட்டம் தொடங்கி 18 ரன்கள் எடுக்கும் முன்பே இந்திய அணி நியூஜிலாந்து வீரர்கள் பந்து வீச்சை தாங்க முடியாமல் 4 விக்கட்டுகள் இழந்தனர்.

இந்திய அணியின் வீரர்களான ரோகித் சர்மா 2 ரன்களிலும், சுய்மன் ஹில் 7 ரன்களிலும் ஹென்றியின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். இந்தியா சதத்தை எட்ட 29 ஓவர் ஆனது. அனைத்து விக்கட்டுகளையும் 49.5 ஓவரில் இழந்து 252 ரன்களை இந்தியா எடுத்தது. அம்பதிராயுடு 90 ரன்களும் விஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 45 ரன்கலும் எடுத்திருந்தனர்.

அடுத்து பேட்டிங்கில் இறங்கிய நியுஜிலாந்து அணியில் கெர்லின் மன்ரோ 24 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு நிகோலஸ் 8 ரன்கள், கிராண்ட் ஹோம் 11 ரன்கள், நிஷம் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டத்தில் 44.1 ஓவர்களில் நியுஜிலாந்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 217 ரன்க்ள் எடுத்தன. அதை ஒட்டி இந்தியா இந்த போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்தியா மொத்தமுள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகலில் வெற்றி பெற்ற போதே இந்தியா தொடரைக் கைப்பற்றுவது நிச்சயமாகி விட்ட நிலையில் 4 போட்டியில் நியூஜிலாந்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடுத்தது. இன்றைய இறுதி மற்றும் 5 ஆம் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றி உள்ளது.