பீஜிங்,

டந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களது படைபலன்களை எல்லைப்பகுதியில் குவித்து வைத்துள்ளன.

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ள நிலையில், இந்நிலையில் இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வருகிறது.

அப்படியொரு போர் மூண்டால் இந்தியாவே வெல்லும் என்று சீனர்களே ஆரூடம் கூறி வருகிறார்கள். இதுகுறித்து அவர்களே  தங்களுக்கு கேள்விகளை எழுப்பி, அதற்கு விடையும் அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ராணுவ தொழில்நுட்பம்: ஆயுதம் மற்றும் ராணுவ தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னோடி யாக இருப்பது அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள்.

இந்த இரு நாடுகளும் இந்தியாவின் நட்பு நாடுகள். அதன் காரணமாக இந்த இருநாடுகளின் ஆயுத பலமும் இந்தியாவுக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும்  இரு நாடுகளின் தொழில்நுட்பத்தோடு சீனாவின் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டால் சீனாவின் தொழில்நுட்பம் ஒன்றும் பெரியதில்லை என்றும் அது வெறும் குப்பை என்றும் கூறி உள்ளனர்.

மக்கள் தொகை: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது சீனா. இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா. இந்த இரு நாடுகளும் மக்கள் தொகையை குறைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது.

சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான அறிவிப்பு உள்ளது. இந்தியாவில் ஒரு குழந்தை அறிவிப்பு இருந்தாலும் அதற்கு மேல் குழந்தை பெற்றாலும் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் போர் மூண்டால், அது சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஒரு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக  இந்தியாவிற்குத் தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சட்டம்: இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால்,  20 வயதுக்கும் அதிகமாக இருக்கும் ஆண்கள் கண்டிப்பாக  ராணுவத்திற்கு வர வேண்டும் என்ற வகையில் சட்டம் நிறை வேற்றப்பட லாம் என்றும்,  அதன் காரணமாக அரசுக்கு எதிராக உள்நாட்டு கலவரம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்றும், இதற்கு சீனா இடமளிக்காது என்றும் கூறப்படுகிறது.

சமுக மற்றும் அரசியல் அமைப்பு:  இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்திய ராணுவ வீரர்கள் எவ்விதமான தூண்டுதல் இல்லாமல் தானாக முன்வந்து நாட்டைக் காக்கும் உணர்வு கொண்டவர்கள். ஆனால், சீன ராணுவத்தினர் அவ்வாறு செயல்பட மாட்டார்கள் என்றும், அரசு கட்டளைக்குப் பயந்தும், அரசை மகிழ்விக்க மட்டுமே ராணுவம் செயல்படும் என்றும் இதனால், இது இந்தியாவிற்கு கூடுதல் வெற்றி வாய்ப்பை நல்கும் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சீனர்களே தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும்  இடையே  போர் வரக்கூடாது என்று விரும்புவதாகவும், உலகிலேயே ஆசிய கண்டம் தான் மிகவும் அமைதியாக இருக்கிறது அது நீடிக்க வேண்டும் என்றும் பலர் கூறி உள்ளனர்.

இரு நாடுகள் மத்தியிலான போர் ஏற்பட்டால், கடந்த நூற்றாண்டில் ஐரோப்பா சந்தித்த நிலைதான் தற்போது இரு நாடுகளுக்கும் ஏற்படும் என்றும், இதுவரை சீனாவில் நான் அமைதியான நிலையில் வாழ்ந்து வருகிறோம் என்றும்,  இதுவே எனது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான சீனர்கள் கூறியுள்ளனர்.