சென்னையை சேர்ந்த 8 பேர் இங்கிலாந்தில் சாலை விபத்தில் மரணம்

Must read

க்கிம்ஹாம்ஷயர், இங்கிலாந்து

ங்கிலாந்து நாட்டில், மினி பஸ் மீது இரு டிரக்குகள் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் மரணம்டைந்துள்ளனர்.  3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

நேற்று முன் தினம்,  இங்கிலாந்துக்கு வந்திருந்த இந்திய சுற்றுலா பயணிகள் சிலர் ஒரு மினி பஸ்ஸில் பக்கிம்ஹாம்ஷயரில் உள்ள நெடுஞ்சாலையில் ஊர் சுற்றிப் பார்க்க பயணம் செய்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது இரு டிரக்குகள் மினி பஸ்ஸின் இருபுறமும் எதிர்பாராதவிதமாக மோதின.

அந்த மினிபஸ் இரு டிரக்குகள் இடையில் சிக்கி நசுங்கியது.  விரைந்து வந்த போலீசார் பஸ்ஸின் உள்ளே இருந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அங்கு பஸ்ஸில் இருந்தவர்களில் 8 பேர் மரணம் அடைந்தனர்.  ஒரு ஆண், ஒரு பெண், மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் கவலைக்கிடமாக உள்ளனர்.  இது தவிர மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார்.  இவர்கள் இந்தியாவில் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மின் பஸ்ஸின் ஓட்டுனர் மரணம் அடைந்தவர்களில் ஒருவர் ஆவார்.   அவர் இந்தியாவை சேர்ந்த சிரியாக் ஜோசப் என்பது தெரிய வந்துள்ளது.  டிரக் டிரைவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் பலியானவர்களின் உறவினருக்கு தகவல் அனுப்பி உள்ளது.  மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.

More articles

Latest article