இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

Must read

பார்ல்:
ந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாளை பார்ல்-இல் தொடங்குகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் பார்ல் மைதானத்திலும் கடைசி போட்டி கேப்டவுனில் நடைபெற உள்ளது.

இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பார் என்றும் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், சிராஜ் காயம் காரணமாக விலகி உள்ளதாலும் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.

நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதனால் ஒருநாள் தொடரை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது என்பது குறிப்பிடத்தகது.

More articles

Latest article