விசாகப்பட்டினம்:
இந்திய சுழற்பந்து வீச்சாளரான, தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ரவிச்சந்திரன், சமீப காலமாக சில போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தான் இந்தியா தென்னாப்பிரிக்கா வுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பங்கு பெறாதது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
தான் மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்தின் போது விளையாட விரும்பியதாகவும், ஆனால், தன்னை உட்கார வைத்து விட்டார்கள். இது தனக்கு மனக்கஷ்டத்தை அளித்தது என்று அஸ்வின் கூறி உள்ளர்.
கடந்த 2018ம் ஆண்டு இந்தியா தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அணி நிர்வாகம், அஸ்வினுக்கு பதில் ஜடேஜாவை களமிறக்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 9 மாதங்க ளாக கவுண்டி கிரிக்கெட், லீக் கிரிக்கெட் தமிழ்நாடு பிரீமியர் லீக் போன்ற ஆட்டங்களில் கலந்து கொண்டு தன்னை மெருகேற்றி வருகிறார்.
அஸ்வினின் உடற்தகுதி குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் கவாஸ்கரும் அவரது நிலை குறித்து விமர்சனம் செய்திருந்தார். இது கூறிய அஸ்வின், தென்னாப்பிரிக்கா அடிலெய்டு போட்டியில் ஆட ஆர்வம் கொண்டிருந்தேன், ஆனால் தனக்கு ஏற்பட்டிருந்த காயங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதிருந்ததால், சில நாட்கள் ஆடுவதை நிறுத்தி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,
இதன் காரணமாகவே தென்னாப்பிரிக்கா பயணத்தில் பங்கேற்க முடியவில்லை என்றவர், அந்த ஆட்டத்துக்கு தான் தேர்வு செய்யப்படாதது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் நான் விளையாடிய அனைத்து கிரிக்கெட்டையும் ரசித்தேன் எனறவர், தான் ஒவ்வொரு முறையும் நான் டிவியில் விளையாட்டைப் பார்க்கும்போது, நான் விளை யாட்டை விளையாட விரும்புகிறேன், நான் வெளியேறவில்லை என்று உணர்ந்தேன். இது மிகவும் இயற்கையானது என்றவர்,என் வாழ்க்கையிலும் வேறு சில விஷயங்களைச் செய்ய முயற்சித் தேன் என்று கூறினார்.
“எனது வாழ்க்கை கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட்டைப் பற்றியது என்றவர், . எனது வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள், எல்லோரும் எனது ஆட்டம் இன்னும் கொஞ்சம் தகுதியானதுழ என்று என்று கருதுவதாலும், நானும் தகுதியானவன் என்பதால், விளையாட்டிற்கு அதிக நேரம் செலவிட முயற்சித்தேன், ”என்றும் அவர் கூறி உள்ளார்.
தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் அனுபவ சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் எய்டன் மார்கிரம், ப்ரூன் 4 விக்கெட்களை வீழ்த்ததியது குறிப்பிடத்தக்கது.