இந்தியா – நியூசிலாந்து இறுதிச்சுற்று: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

Must read

சௌதாம்ப்டன்:
ழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் இன்று முதல் தொடங்கியது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில், விஹாரி இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் சௌதாம்ப்டனில் காலை முதலே பெய்து வரும் மழையால் முதல் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. மழை தொடர்ந்து பெய்வதால் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

More articles

Latest article