cricket-india-v-england-2t-d4_4598f44a-af14-11e6-b961-04ee4fa7b706விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து 2 வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் இன்று. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி, 93 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. மொத்தம் 405 ரன்கள் எடுத்தால் தான் இங்கிலாந்து அணி வெற்றிபெற முடியும். கைவசம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. இதனால் போட்டியை டிரா செய்வதே கடினம். இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.