இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் வந்த வேகத்திலேயே வெளியேறினாலும், அந்த அணி வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

INDvAUS

இந்தியா வந்துள்ள ஆதிரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டி20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தொடக்க வீரராக களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ரன் எடுக்காமல் 2வது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். அதன்பின்னர் வந்த உஸ்மான் கவாஜா ஸ்டெய்னுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்ப்டுத்தினார். இருவர்கள் இருவரும் இணைந்து இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளித்து ரன் சேர்த்தனர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி தேனீர் இடைவேளை வரை 72 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய கவாஜா அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விளையாடிய ஸ்டெய்னும் ஆட்டமிழக்க பீட்டர் ஜேன்ஸ்கம்ப் மற்றும் மேக்ஸ்வெல் இணை சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாட ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்கள் முடிவில் 4 வ்க்கெட் இழப்பிற்கு 133 ரன்களை சேர்த்துள்ளது.