மரண தனனையை தடை செய்வது தொடர்ப்பான தீர்மானத்தை ஐ.நா சபை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தை ஆதரித்து 115 நாடுகளும், எதிர்த்து 38 நாடுகளும் வாக்களித்தன. 31 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

death_penalty

இந்தியாவில் மரண தண்டனைகள் மிகவும் அதிதாகத்தான் விதிக்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் வெறும் மூன்று தண்டனைகளே விதிக்கப்பட்டன. இந்த தீர்மானம் இந்தியாவின் சட்டம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் இந்த தீர்மானத்தை எதிர்த்து தாம் வாக்களிப்பதாகவும், இறையாண்மை உள்ள நாடுகளுக்கு தங்களுக்கான சட்டங்களை தாங்களே வரையறை செய்துகொள்ள உரிமையிருப்பதாகவும் இந்தியா தெரிவித்தது.
115 நாடுகளின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன், கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.