டெல்லி: உலக நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதால், 5 வயது முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குங்கள் என மத்தியஅரசுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

சீனா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் பிஎஃப்7  என்ற உறுமாறிய கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் பல நாடுகள் குழந்தைகளுக்கு  தடுப்பூசி போடும் பணிகளையும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடும் பணிகளையும் முடுக்கி விட்டு உள்ளன.

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. அதன்படி, தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.  மேலும், குழந்தைகளுக்கு  கோவாக்ஸ் மற்றும் கோவாக்சின் என 3 வகை தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போடலாம் என அறிவுறுத்தி உள்ளது.

இநத் நிலையில்,  தற்போது மீண்டும்  கொரோனா பரவ தொடங்கியிருப்பதை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.  5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விவேகமான செயலாக இருக்கும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பக்க நோய்களான நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்