டெல்லி: இந்தியாவில் 2036ம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர்  தெரிவித்து உள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா ஏலம் எடுக்கும் என்றும்,   இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமையைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் (Olympic Games அல்லது Olympics)   இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்துலக வீரர், வீராங்கனைகள் பங்குகொண்டு தங்களது திறமையுயம், தங்களது நாட்டின் பெயரையும் பறைசாற்றி வருகிறார்கள்.

 சுமார்  200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. இந்த ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்பதை,  அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவே ஆராய்ந்து முடிவு செய்து அறிவிக்கிறது. சுவிட்சர்லாந்தின் லாஸனை தலைமையிடமாகக் கொண்ட எஃப்ஐஇ எனப்படும் அமைப்பு உலகளவில் இந்த விளையாட்டை நிர்வகித்து வருகிறது. உலகக் கோப்பை, ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், கண்டங்கள் அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இந்த விளையாட்டில் சிறப்புற்று விளங்குகின்றன. கடந்த  2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

இநத் நிலையில்,  2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏலத்தை எடுக்க  இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய  விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்  ‘உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டிக்கு நாடு களமிறங்குவதற்கு இது “சரியான நேரம்” என்றும், விளையாட்டை ஊக்குவிக்க இந்தியா இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டால், நாங்கள் ஒலிம்பிக்கை நடத்துவது மட்டுமல்லாமல், அதை பெரிய அளவில் நடத்துவோம் என்றும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று  கூறினார்.

இந்தியாவில்,  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான அகமதாபாத்தின் பாதையை கோடிட்டுக் காட்டும் திட்ட வரைபடம் வரும் செப்டம்பரில் மும்பையில் நடைபெறும் ஐஓசி கூட்டத்தில் முழு அரசாங்க ஆதரவுடன் வழங்கப்படும் என்றவர்,  பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்கு அடுத்த மூன்று கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஹோஸ்டிங் உரிமையை IOC ஏற்கனவே வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஒலிம்பிக் போட்டி தொடர்பாக  இந்தியாவின் முயற்சி வெற்றி பெற்றால், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமையைப் பெறும்.

இந்தியா கடந்த 2010 இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது, ஆனால் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் பரவலான குற்றச்சாட்டுகளால் அந்த நிகழ்வு சிதைந்தது குறிப்பிடத்தக்கது.