டெல்லி: 3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கே-4 அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஒ தெரிவித்து உள்ளது.
இந்த கடற்படையைச்சேர்ந்த அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, 3,500 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை சோதனை இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தியது. இந்த சோதனை மாபெரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியில், அதிநவீன ஏவுகணைகளை தயாரிப்பதிலும், விண்வெளி தொழில் நுட்பங்களிலும் தீவிரம் காட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் ஒட்டுமொத்த ராணுவ திறன்களை நம் நாடு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பல்வேறு வரம்புகளை கொண்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன், ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து, நீண்ட துார இலக்குகளை தாக்கும், ‘ஹைப்பர்சானிக்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (நவம்பர் 27ந்தேதி) 3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் கே-4 ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இந்த சோதனையானது, விசாகப்பட்டினத்தில் உள்ள வங்கக் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, இந்திய கடற்படைக்கு சொந்தமான அணுசக்தியில் இயங்கும் ஐ.என்.எஸ்., அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் திறன் உடைய, கே – 4 ஏவுகணை, நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதன் வாயிலாக, நிலம், ஆகாயம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணையை செலுத்தும் குறிப்பிட்ட சில நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தொலைவு வரை சென்று தாக்கும் திறன் உடையது. இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.