ஆக்லாந்து:

இந்தியா- நியூசிலாந்துக்கிடையேயான இரண்டாவது ட்வென்டி-20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா மீண்டும் சாதிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


நியூசிலாந்தில் நடைபெறும் 3 போட்டிகளைக் கொண்ட ட்வென்டி-20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வியடைந்தது.

இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது போட்டி நடக்கிறது.

சமீபத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் வீழ்ந்தது. எனினும் 5-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதேபோல், இரண்டாவது போட்டியில் இந்தியா பதிலடி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா,ஷிகர் தவான் ஜோடி சிறப்பாக ஆடினால் மட்டுமே சாத்தியம்.
முதல் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு எடுபடவில்லை. அதிகபட்சமாக 12 ரன்களை பவுலர்கள் கொடுத்தனர்.

இம்முறை சகால் அதிக விக்கெட்டுகளை சாய்க்கவேண்டும். இவருடன் குல்தீப்பும் சேர்க்கப்படுகிறார். இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினால், இரண்டாவது போட்டியில் வெற்றி நிச்சயம் என்ற நிலை உள்ளது.